12 ஜிபி ரேம்..டைமண்ட் சிட்டி 7400 ப்ராசசர்.. 50mp சோனி கேமரா.. வருது மோட்டோவின் தரமான மொபைல்

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஏட்ஜ் 60 ரக மொபைல் வரிசையில் வருகிறது. இதனை வருகிற ஜூன் 17ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் 25,000 முதல் 30,000 பட்ஜெட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

moto
moto

மோட்டரோலா ஏஜ் 60 சிறப்பு அம்சங்கள் :
புதிதாக வரும் மோட்டோரோலா மொபைலில் 6.6 இன்ச் 10 பிட் poled டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இது 120hz ரெப்ரஸ் ரேட்டுடன் மிகவும் ஸ்மூத்தாக இயங்கக் கூடிய வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. டிஸ்ப்ளே பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை கார்னிங் கொரிலா கிளாஸ் 7 பாதுகாப்பு உள்ளது.

இதில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 7,400 பிராசசர் கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஸ்டாக் ஆண்ட்ராய்டு உடன் வருகிறது. மற்றும் 3 வருட ஓஎஸ் அப்டேட்டும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்டும் வழங்கப்படும் என மோட்டரோலா உறுதியளித்திருக்கிறது. இந்த மொபைலில் பின்பக்க மூன்று கேமரா அமைப்புடன் ஓ ஐ எஸ் வசதியுடன் 50 எம்பி பிரைமரி கேமரா 50எம்பி ultrawide மற்றும் 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என இதன் கேமரா அமைப்பு உள்ளது.

இந்த மொபைலில் செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் கொண்ட முன்புற கேமரா வருகிறது. இதில் ஐபி 68 தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பு கட்டமைப்பு இந்த மொபைலில் உள்ளது, மேலும் மிலிட்டரி கிரேட் பாதுகாப்பும் உள்ளது. இந்த மொபைலில் டால்பி அட்மாஸ் ஆடியோ தரக்கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 gb ஸ்டோரேஜ் வேரியன்டில் வருகிறது மேலும் ஸ்டோரேஜை 1tb வரை விரிவாக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

Leave a Comment