Free ஆதார் அப்டேட்… வெளியான முக்கிய அறிவிப்பு… ஒரே குஷி தான்..!

இந்தியாவில் பொது மக்களின் அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்த ஆதார் அட்டையை பொது மக்கள் ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்கும் வசதியினை ஆதார் சேவையை வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கி வருகிறது. எனினும், இதற்கான காலக்கெடு ஜூன் 14, 2026-ம் தேதியோடு நிறைவு பெற இருந்தது.

இந்த நிலையில், ஆன்லைனில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இதேபோன்று சில முறை ஆன்லைனில் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருப்பதற்கான தகவலை யுஐடிஏஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

முந்தைய அறிவிப்பின் படி, 2025 ஜூன் 14 அன்று இலவச புதுப்பிப்பு வசதி முடிவடைய இருந்தது. ஆனால், பொது மக்கள் வசதிக்காக இந்த இலவச ஆன்லைன் புதுப்பிப்பு காலக்கெடுவை 2026 ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

இதன் மூலம், பயனாளர்கள் myAadhaar.gov.in இணையதளத்தில் தங்களின் ஆதார் விவரங்களான – முகவரி, புகைப்படம் போன்றவற்றை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க முடியும். நேரடியாக ஆதார் சென்டர்களில் புதுப்பிக்க வேண்டுமானால், சாதாரண சேவைக்கான கட்டணம் ரூ. 50 ஆக இருக்கிறது.

யார் புதுப்பிக்க வேண்டும்?

கடந்த 10 ஆண்டுகளில் ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள்

முகவரி அல்லது பிற தகவல்களை மாறியவர்கள்

புகைப்படம் தெளிவாக இல்லாதவர்கள்

எப்படி புதுப்பிக்க வேண்டும்?

1. https://myaadhaar.uidai.gov.in இணையதளத்திற்கு செல்லவும்

2. ஆதார் (Aadhaar) எண்ணை உள்ளீடு செய்து OTP மூலம் உள்நுழையவும்

3. அப்டேட் டாக்குமென்ட் (Update Document) பகுதியில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்

4. உறுதிப்படுத்தி சமர்ப்பிக்கவும்

முக்கிய குறிப்புகள்:

ஆதார் விவரங்களை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்வதற்கு மட்டும் இலவசம்

ஆதார் சேவை மையங்கள் வழியாக செய்தால் கட்டணம் (ரூ. 50) விதிக்கப்படும்

Leave a Comment