ஒப்போ நிறுவனம் விரைவில் தனது A5 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்போ A5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒப்போ A5 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று ஸ்மார்ட்பிரிக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனின் முன்புற டிசைனை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, பஞ்ச் ஹோல் டிசைன், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15 வழங்கப்படுகிறது. இத்துடன் டிரினிட்டி எஞ்சின் பூஸ்டர் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் மூலம் இயங்குகிறது.
மெமரியை பொருத்தவரை ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழகங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. எனினும், இதன் சார்ஜிங் பற்றி எந்த தகவலும் இல்லை. புகைப்படங்களை எடுக்க செய்யும் கேமரா சென்சார்கள் பற்றிய தகவல்களும் மர்மமாகவே வைக்கப்பட்டுடள்ளன. புதிய ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போன் CPH2751 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஒப்போ A5 5ஜி மாடல் தான் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 8
MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என்றும் இதில் IP68/69 தரச் சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை:
இந்தியாவில் ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரு வெர்ஷன்களில் கிடைக்கும். இதன் பேஸ் மாடல் விலை ரூ. 15,499 முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது.