விற்பைக்கு வந்த 2 மாதங்களில் அதிரடி ஆஃபரில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் தனது கேலக்ஸி A56 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமான இரண்டே மாதங்களில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி உள்பட மொத்தம் மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 41,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வேரியண்ட் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி A56 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 38,999 விலையில் கிடைக்கிறது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 3000 குறைவு ஆகும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 5000 வரை குறைவு ஆகும். மேலும் ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 36,999 என மாற்றிவிடும்.

இவைதவிர பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது விலையை மேலும் குறைக்க முடியும். ஐசிஐசிஐ அமேசான் பே கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது கேஷ்பேக் பெறலாம். இந்திய சந்தையில் கேலக்ஸி A56 5ஜி ஸ்மார்ட்போன்- ஆசம் கிராஃபைட், ஆசம் லைட் கிரே மற்றும் ஆசம் ஆலிவ் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் உருவாக்கியதில் மிக மெல்லிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி A56 5ஜி மாடல் பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் கிளாஸ் பேக் மற்றும் உறுதியான மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கிறது. இவை ஸ்மார்ட்போனிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்புடன் வருகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A56 5ஜி மாடலில் 16.5 செ.மீ. சூப்பர் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 12MP லென்ஸ், 5MP சென்சார் மற்றும் 12MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மட்டுமின்றி 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

Leave a Comment