இனி வாட்ஸ் அப்புக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.. பயனர்களுக்கு அதிர்ச்சி அளித்த மெட்டா

உலகம் முழுவதும் அதிக பயனர்களை கொண்டுள்ள செயலி whatsapp தான். தங்களுடைய நெருங்கிய உறவுகளுடன் சொந்தம் மற்றும் தற்போது பிசினஸ் அக்கவுண்ட் மூலம் அனைத்து தொழில் முறைகளுக்கும் இன்றைய காலகட்டத்தில் whatsapp செயலி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இதுவரை இலவசமாக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் விளம்பரமும் இல்லாத ஒரே செயலி இதுதான். இதிலும் தற்போது புது புது மாற்றங்கள் செய்ய உள்ளது மெட்டா. whatsapp subscription செயலியில் சந்தா செலுத்தும் முறையை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகத்தில் உள்ள அனைவரும் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தை பெற்றுள்ளதால் அந்த தளத்தை வணிகமாக மாற்ற மெட்டா முடிவு எடுத்துள்ளது. அதன்படி பயனர்கள் whatsapp ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களை சந்தா செலுத்தி பார்க்கும் வகையில் மெட்டா நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

whatsapp
whatsapp

தற்போது வாட்ஸ் அப் சேனல்களை அனைவரும் கட்டணம் இல்லாமல் பார்க்கும் வசதி அமலில் இருந்தாலும் இந்த சப்ஸ்கிரிப்ஷன் கொண்டு வந்தால் எந்த தகவலை சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கலாம் என அதன் அட்மின் முடிவு செய்வார். இதன் மூலம் சந்தாதாரர்கள் கூடுதலாக கவனிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல் தொடர்பில் எந்த ஒரு தலையிடும் இருக்காது எண்டு-டு-எண்டு என்கின்ற முறை தொடரும் என்று மெட்டாத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வாட்ஸ் அப் செயலியில் விளம்பரங்கள் ஏதும் வரவில்லை.

ஆனால் தற்போது விளம்பரங்களை ஒளிபரப்ப மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வணிக வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று மெட்டா கருதப்படுகிறது.  அதே நேரத்தில் பயனர்களின் செல்போன்களில் உள்ள தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் விற்க மாட்டோம் என மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment