பிரமியம் ஃப்ளாக்ஷிப் மொபைலில் நத்திங் மொபைலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது அந்த வகையில் நத்திங் போன் 3 எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் இப்பொழுது அதைப் பற்றிய ஒரு சிறு அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது அதில் என்ன பிராசசர் பயன்படுத்தப்படுகிறது என்று அப்டேட் வெளிவந்துள்ளது.
அதன்படி இதில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எஸ் ஜென் 4 பிராசசர் இடம் பெற்றுள்ளது என்பதை நத்திங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் உயர்தர பிராசசர் ஆன snapdragon 8 எலைட் சிப்செட் இல்லையென்றாலும் நத்திங் போன் 2 வில் இருந்த பிராசசரை விட அதிக செயல் திறனை கொண்ட பிராசசர் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் இந்த மொபைலில் தேவைக்கேற்ப ஸ்பீடும்,பெர்பார்மன்ஸ் அதிகமாகவே இருக்கும். மேலும் இதில் 36 % சிபியு செயல் திறன் மற்றும் 88% ஜிபியு அதிகரிப்பு மற்றும் 60% என்பியு செயல்திறனில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது ப்ரீமியம் பிரிவில் வருவதால் இதன் விலை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, மற்றும் 120hz ரெஃப்ரெஷ்ரேட்டும் உடன் வருகிறது 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் 50 எம்பி கேமரா 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது மேலும் 5 5,000 பேட்டரி இதை சார்ஜ் செய்வதற்கு 50w சார்ஜருடன் வருகிறது.