ACT ரீசார்ஜ்-க்கு அமேசான் பிரைம் சந்தா? பயங்கர ஆஃபரா இருக்குதே..!

பிராட்பேன்ட் இண்டர்நெட் சேவையை வழங்குவதிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பிராட்பேண்ட் சேவையை வழங்கும் நிறுவனங்கள் அவ்வப்போது அசத்தல் சலுகைகள் மற்றும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வரிசையில், தற்போது ஏசிடி (ACT) நிறுவனம் தனது ஃபைபர்நெட் சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் அமேசான் பிரைம் ஓடிடி சந்தாவினை வழங்கி வருகிறது.

இதற்காக ஏசிடி நிறுவனம் அமேசான் பிரைமுடன் கூட்டணி அமைத்துள்ளது. பயனர்கள் ஏசிடி ஃபைபர்நெட் வாங்கும் போது அவர்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா இலவசமாக வழங்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுக்க ஏசிடி ஃபைபர்நெட் பயனர்கள் இலவசமாகவே ஓடிடி சந்தா பெற்றிட முடியும்.

ஏசிடி பிராட்பேண்ட் உடன் அமேசான் சந்தா வழங்கும் ரீசார்ஜ் விலை விவரம்:

தமிழ்நாடு ரூ. 749
டெல்லி ரூ. 700
ஜெய்ப்பூர் ரூ. 699
லக்னோ ரூ. 699
ஐதராபாத் ரூ. 699
ஐதராபாத் ரூ. 798
ஆந்திர பிரதேசம் ரூ. 778
பூனே ரூ, 998
தும்கர் ரூ. 999
பெங்ளூரு 949
வாராங்கள் ரூ. 789
காசியாபாத் ரூ. 700

இந்த ரிசார்ஜ் செய்வோர் அந்தந்த நகரங்களில் இதற்காக வெவ்வேறு தொகை வசூலிக்கப்படும். இதுப்பற்றிய முழு விவரங்கள் ஏசிடி அதிகாரப்பூரவ வலதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதேபோல் இணைய வேகம் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்பட வேறுப்படும்.

பொதுவாக அமேசான் பிரைம் லைட் சந்தாவின் கீழ் பயனர்கள் அமேசான் தளத்தில் ஆர்டர் செய்த பொருட்களை அதிவேகமாக, அதிகபட்சம் ஒன்றிரண்டு நாட்களில் டெலிவரி பெற்றுக் கொள்ள முடியும். ஏசிடி ஃபைபர்நெட் வாங்காமல் அமோன் பிரைம் லைட் சந்தா வாங்கும் போது ஆண்டுக்கு ரூ. 799 கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

Leave a Comment