மிக விரைவில்… வேற லெவல் டிசைனில் புது இயர்பட்ஸ் வெளியிடும் சாம்சங்… எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய வயர்லெஸ் இயர்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. கேலக்ஸி பட்ஸ் கோர் பெயரில் உருவாகி இருக்கும் புதிய இயர்பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பாக சாம்சங் வெளியிட்டுள்ள டீசர்களில் பெயரை குறிக்கும் வாசகம் – “let the music move you to the core,” இடம்பெற்று இருக்கிறது.

இது தொடர்பாக உருவாக்கப்பட்டு இருக்கும் வலைதள பக்கம் இந்தியா உள்பட பல நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இயர்போன் பியூரோ ஆஃப் இந்தியா ஸ்டான்டர்ட்ஸ் (BIS) வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இது புதிய இயர்பட்ஸ் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது.

சாம்சங் இந்தியா சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசர்களில் புதிய இயர்பட்ஸ்-இன் வெளிப்புற தோற்றம் ஓரளவுக்கு தெரியும் வகையில் சில்ஹவுட் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதில் புதிய இயர்பட்ஸ் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி பட்ஸ் 3 தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த இயர்பட்ஸ் ஸ்டெம்-லெஸ் டிசைன் கொண்டிருக்கும் என்றும் இது கிட்டத்தட்ட கேலக்ஸி பட்ஸ் FE போனஅறு இருக்கும் என்று தெரிகிறது.

புதிய கேலக்ஸி பட்ஸ் கோர் மாடல் 2023 கேலக்ஸி பட்ஸ் FE மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், இதன் விலை கேலக்ஸி பட்ஸ் 3-ஐ விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்படுவதை அடுத்து கேலக்ஸி பட்ஸ் FE 2 மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலில் நீண்ட நேர பேட்டரி பேக்கப், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது. தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் இந்த மாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Comment