விவோ நிறுவனம் தொடர்ந்து புதுப்புது மொபைல்களை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தற்போது எந்தவித அறிவிப்பும் விளம்பரமும் இல்லாமல் y சீரியஸில் புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் விவோ y29t 5G மொபைலை அறிமுகம் செய்துள்ளது.
விவோ y29t 5G மொபைலின் சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் 1600 * 720 என்ற பிக்சல் ரெசல்யூசனுடன் 90 hz ரெப்ரஸ்ரேட் உடன் வருகிறது. மேலும் இதில் 570 என்ற பீக் பிரைட்னஸ்சும் உள்ளது. பிராசசர் அமைப்பை பொருத்தவரை இதில் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 6300 சிப்செட் கொண்டு வருகிறது. இது என்ட்ரி லெவல் மொபைல்களுக்கு சிறந்த பெர்ஃபார்மன்ஸை கொடுக்கும்.
ரேம் அமைப்பை பொருத்தவரை lpddr4x கொண்டு வருகிறது இதில் 6ஜிபி , 8ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. கேமரா அமைப்பை பொறுத்தவரை பின்புறம் இரண்டு கேமரா கொண்டு வருகிறது அதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் .8 மெகாபிக்சல் சப் லென்ஸ் கேமராவுடன் வருகிறது.
மேலும் முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரை 5 mp செல்பி கேமரா வருகிறது. இதில் 6000 mah கொண்ட பெரிய பேட்டரி வருகிறது. இதனை சார்ஜ் செய்வதற்கு 15w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் கிடைக்கிறது. ஓ எஸ் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 15, ஃபன் டச் ஓ எஸ் 15 கொண்டு இயங்குகிறது. சைட் மவுண்ட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது.
மேலும் இதில் எஸ்டி கார்டுக்கு என்று தனி ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐ பி 64 ரேட்டிங் இடம் பெற்றுள்ளது. ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி,யூஎஸ்பிசி போன்ற கணக்டிவிட்டி அம்சங்களும் கிடைக்கிறது. விவோ ஒய் சீரியஸ் பொருத்தவரை ரீடைல் கடையில் மட்டும் விற்பனை செய்யப்படுபவை ஆகும். இதன் விலை 15000 ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.