8GB ரேம், 6000mAh பேட்டரி… மிகக் குறைந்த விலையில் புது ஒப்போ போன் அறிமுகம்..!

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய K13x 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய K சீரிஸ் ஸ்மார்ட்போன் மிலிட்டரி தர உறுதியை நிரூபித்து MIL-STD-810H தரச்சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் IP54 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஓஎஸ் அப்டேட்கள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக ஒப்போ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வெறும் 7.9mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6000mAh பேட்டரி, 45 வாட் சூப்பர்வூக் சார்ஜருடன் கிடைக்கிறது.

ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் மிட்நைட் வைலட் மற்றும் சன்செட் பேட்ச் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகையும், மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

Leave a Comment