போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த தலைமுறை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்- ஏர்டோப்ஸ் பிரைம் 701 ANC மாடலை அறிமுகம் செய்தது. இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இயர்பட்ஸ் அதிக தரம், அம்சங்கள் மற்றும் மென்பொருள் சப்போர்ட் பெறும் என்று போட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
புதிய ஏர்டோப்ஸ் பிரைம் 701 ANC மாடலில் 10mm டிரைவர்கள், 24-பிட் போட் ஸ்பேஷியல் ஆடியோ வசதி, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி அதிகபட்சம் 46db வரையிலான வெளிப்புற சத்தத்தை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இயர்பட்ஸில் சற்றே தெளிவான ஆடியோ கேட்க முடியும்.
இந்த இயர்பட்ஸ் மாடலில் அதிகபட்சம் 50 மணி நேர பிளேபேக், ASAP சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். அழைப்புகளின் போது பின்னணியில் உள்ள சத்தத்தை குறைக்க நான்கு மைக்ரோபோன்கள், AI ENx தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இத்துடன் இன்-இயர் டிடெக்ஷன், 60ms லோ லேடன்சியுடன் பீஸ்ட் மோட், போட் அடாப்டிவ் EQ, ஹியரபில்ஸ் ஆப் சப்போர்ட், IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் பிரைம் 701 ANC இயர்பட்ஸ் ஜின்க் வைட், அப்சிடியன் கிரே மற்றும் டைட்டானியம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இந்த இயர்பட்ஸ் ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. விற்பனை அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.