ஆர்டர் பறக்க போகுது.. 6000 mah பேட்டரி.. 50 mp கேமரா.. மீடியாடெக் 6300.. வந்தாச்சு vivo t4 lite 5g

விவோ நிறுவனம் இந்தியாவில் அதன் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று மக்களிடையே அதிக நம்பிக்கை தன்மை வாய்ந்த ஸ்மார்ட்போனாக விவோ விளங்குவதால் அதன் நிறுவனத்தின் மாடல்கள் அனைத்தும் விற்பனையில் ஜொலித்து வருகிறது. அந்த வகையில் தற்போது vivo t4 lite 5g கவர்ச்சி சிறப்பம்சங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது.

vivo t4 lite 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே இதனுடன் 90 ஹெட்ஸ் ரெப்ரஸ்ரேட் உடன் 1000 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வெளி வருகிறது. இந்த டிஸ்ப்ளே சூர்ய வெளிச்சம் இல்லாத இடங்களில் தெளிவாக தெரியும். மேலும் இதில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 6,300 பிராசசர் கொண்டுள்ளது. ரேம் அமைப்பை பொறுத்தவரை lpddr4x அமைப்பை கொண்டுள்ளது.

மேலும் இதில் 8 gb ரேம் + 256 gb ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஃபண்டச் ஓஎஸ் 15 உடன் வருகிறது. இந்த விவோ டி4 லைட் 5ஜி 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடனும் 2 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் வருகிறது. இதனுடன் led பிளாஷ்சும் கிடைக்கிறது. மேலும் முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரையில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உடன் வருகிறது.

மேலும் இதில் ஏஐ பயன்படுத்தி புகைப்படங்களை மெருகேற்றும் வசதியும் உள்ளது. பேட்டரி அமைப்பை பொருத்தவரையில் 6000mah என்ற பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 15 w சார்ஜர் வருகிறது மேலும் இது தண்ணீர் மற்றும் தூசு பாதுகாப்பிற்கான ஐபி 64 சான்றிதழ் உடன் வருகிறது. இதன் உருவ அமைப்பை பொறுத்தவரையில் மிலிட்டரி கிரேட் பாதுகாப்புடன் சான்றிதழ் உடன் வருகிறது.

இதனால் இதன் பேனல் ஓரளவுக்கு திடமாக இருக்கும். இதில் சைடு மவுண்டன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 5ஜி,4ஜி wifi-6, ப்ளூடூத் 5.4, gps மற்றும் யூஎஸ்பி டைப் c போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் உள்ளது.

இந்த மொபைல் 4ஜிபி மற்றும் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை 9,999 ரூபாய்க்கும் 6ஜிபி மற்றும் 128 ஜிபி வேரியண்டின் விலை 10,999 ரூபாயும், 8ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 12,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஜூலை 2 தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விவோ மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும்.

Leave a Comment