இந்தியாவில் சைனீஸ் ஃபோன்களுக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அதற்கு நிகராக samsung என்ற ஒரு பிராண்டுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரணம் அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் விலைக்கு ஏற்ற தரத்துடனும் இருக்கும். அந்த வகையில் நாளைக்கு ஜூன் 27 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம் 36 5ஜி மொபைலை வெளியிட உள்ளது.

samsung m36 சிறப்பம்சங்கள் :
இதில் எக்ஸினோஸ் 1380 சிப்செட் பொருத்தி வருகிறது. முன்பு இருந்ததை விட இப்பொழுது மேம்படுத்தப்பட்ட செயல் திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவிக்கிறது. மேலும் கேமரா என்று வரும் பொழுது இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 8 எம் பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம் பி மேக்ரோ கேமரா என்று ட்ரிபிள் கேமரா உடன் வருகிறது.
செல்பி கேமராவை பொறுத்த வரை 13 மெகாபிக்சல் உடன் வருகிறது. மேலும் இதில் 4k வீடியோ ரெக்கார்டிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 6 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம்+256 ஜிபிமெமரி மற்றும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்டில் வருகிறது. ஓ எஸ் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 15 உடன் ஓன் யூ ஐ 7 உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.
மேலும் இதற்கு ஆண்ட்ராய்டு அப்டேட்டும் பாதுகாப்பு அப்டேட்டும் கிடைக்கும் என சாம்சங் உறுதிப்படுத்தி உள்ளது. இதில் 6000 mah பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொண்டு இயங்கும். இதனை சார்ஜ் செய்வதற்கு 25 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். 5g, 4g ஓல்ட்,வைபை,ஜிபிஎஸ் யூஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுடன் இந்த போன் வெளி வருகிறது. இந்த samsung galaxy m36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 20,000 பட்ஜெட்டில் அறிமுகம் ஆகிறது.