கேலக்ஸி AI, ANC மற்றும் பல அம்சங்கள்… பட்ஜெட்டில் அறிமுகமான சாம்சங் இயர்பட்ஸ்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி பட்ஸ் கோர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் டைனமிக் டிரைவர்கள், டீப் சவுண்ட் மற்றும் சக்கிவாய்ந்த பேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் கால் ரிடக்ஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை இயர்பட்ஸில் தலைசிறந்த ஆடியோ தரம் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் கேலக்ஸி ஏஐ அம்சங்கள் மற்றும் விங்டிப்களை கொண்டிருக்கிறது. கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலின் விற்பனை இன்று துவங்குகிறது.

சிறப்பம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலில் டைனமிக் டிரைவர், ANC சப்போர்ட், கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி, மூன்று மைக் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இந்த இயர்போனில் விங்டிப் டிசைன் உள்ளது. இந்த மாடல் காதுகளுக்கு சவுகரியமான அனுபவத்தை வழங்கும். கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலில் கேலக்ஸி ஏஐ அம்சங்கள் உள்ளது. இதில் ரியல்-டைம் இன்டர்பிரெடர் அம்சம் உள்ளது.

இது பயனருக்கு ரியல்டைமில் மொழி பெயர்ப்பு வசதியை வழங்கும். இதன் மூலம் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி உரையாட முடியும். கேலக்ஸி பட்ஸ் கோர் மாடல் மியூசிக் பிளேபேக்கிற்கு டச் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. இத்துடன் மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி, ஆட்டோ ஸ்விட்ச் அம்சம் கொண்டுள்ளது. இவை சாம்சங் ஃபைண்ட் செயலிக்கான சப்போர்ட் உடன் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலில் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது இந்த இயர்பட்ஸ் 35 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் இன்றி இதனை 20 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலின் இந்திய விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பயனர்கள் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை பெற முடியும். கேலக்ஸி A26, கேலக்ஸி A36 அல்லது கேலக்ஸி A56 ஸ்மார்ட்போன்களுடன் இந்த இயர்பட்ஸ் வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி பெற முடியும். இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என இரு நிறங்களில் கிடைக்கிறது.

Leave a Comment