போர்டிரோனிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்தது. போர்டிரோனிக்ஸ் நோவா என அழைக்கப்படும் புதிய ஸ்பீக்கரை பயனர்கள் எங்கும் கொண்டு சென்று பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள விசேஷமான டெக்ஸ்ச்சர் டிசைன் இதனை எளிதில் பிடித்துக் கொள்ளவும், அதிக உறுதியாகவும் இருக்கிறது.
அதிக உறுதியுடன் இருப்பதோடு, அளவில் கச்சிதமாகவும், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போர்டிரோனிக்ஸ் நோவா ப்ளூடூத் ஸ்பீக்கரை வீட்டிற்குள்ளேயும், வெளியிலும் பயன்படுத்த முடியும்.
இந்த புது ப்ளூடூத் ஸ்பீக்கர் 40 வாட் சவுண்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த மாடலில் HD ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் பேசிவ் ரேடியேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த ஸ்பீக்கர் ஆழமான Bass வழங்குவதோடு, இரைச்சலற்ற ஆடியோவை அனுபவிக்க முடியும். மேலும் பொழுதுபோக்கை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், இந்த ஸ்பீக்கரிலேயே RGB லைட்டிங் வழங்கப்பட்டு இறுக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு இந்த மாடலில் ப்ளூடூத் 5.3, வயர்லெஸ் பேரிங், ஆக்ஸ்-இன் மற்றும் யுஎஸ்பி இன் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இரண்டு நோவா ஸ்பீக்கர்களை ஒன்றாக இணைத்து ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ அனுபவம் பெறும் வகையில் ஸ்டீரியோ சவுண்ட் அவுட்-புட் பெற முடியும். இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.
பாடல்களின் ஆடியோவை அதிகப்படுத்துவது, குறைப்பது, அடுத்த பாடல்களுக்கு மாற்றுவது அல்லது பாடல்களை தவிர்ப்பது உள்ளிட்ட அம்சங்களை ஸ்பீக்கர் மூலமாகவும் செய்யும் வசதி இந்த மாடலில் உள்ளது. இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை யுஎஸ்பி டைப் சி போர்ட் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5 மணி நேரம் பயன்படுத்தலாம்.
புதிய போர்டிரோனிக்ஸ் நோவா மாடல் ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2799 ஆகும். எனினும், அமேசான் தளத்தில் இந்த ஸ்பீக்கர் ரூ. 2,599 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கரை வாடிக்கையாளர்கள் போர்டிரோனிக்ஸ் வலைதளம் மற்றும் மின்சாதன விற்பனையாளர்களிடமும் வாங்கிடலாம்.