உலகம் முழுவதும் மக்கள் அனைவராலும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய செயலிகளில் முக்கிய இடத்தில் உள்ளது வாட்ஸ் அப். ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி தற்போது வாட்ஸ் அப்பின் மூலம் அதிகரித்து வருகிறது. தனிப்பட்ட விஷயங்களைத் தாண்டி தற்போது தொழில் முறைகளும் இதில் அடங்கும்.
மக்கள் தங்கள் வேலையில் பிஸியாக இருக்கும்போது தங்களுக்கு வரும் மெசேஜ்களை படிக்க நேரம் இருப்பதில்லை. அவ்வாறு அவ்வாறு வரும் நீண்ட மெசேஜ்களை சுருக்கி வழங்க மெட்டா- ஏஐ பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் விரைவாக தங்களுக்கு வரும் தகவல்களை என்ன என்பதை பார்த்துக் கொள்ளலாம். இந்த ஏஐ மெசேஜ் சம்மரைஸ் செய்து வாடிக்கையாளர்கள் எளிதாக படிக்கக் கூடிய வகையில் கொடுக்கிறது.
தற்பொழுது இந்த அம்சமானது அமெரிக்காவில் ஆங்கில மொழியில் இருந்து ஆரம்பம் செய்கிறது. மெட்டா நிறுவனம் விரைவில் அனைத்து மொழிகளுக்கும் இந்த ஏ ஐ ஃபியூச்சர் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனால் அன்ரீட் மெசேஜை மிகச் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். இதன் பாதுகாப்பு பற்றி மெட்டா கூறுவது நீங்கள் ஏ ஐயை உடன் கருத்துக்களை பகிரும் போது உங்கள் டேட்டா யாரிடமும் செல்லாது.
ஏன் அது மெட்டாவிற்கு கூட தெரியாது. அது தனியார் கிளவுட் ஸ்டோரேஜ் இல் நடக்கிறது. இந்த பாதுகாப்பான நிகழ்வில் யாராவது தலையிட்டால் முழுவதுமாக மூடப்படும். இதைத் தவிர பயனர்கள் அப்டேட் செய்யப்பட்ட சாட் பிரைவசி பயன்படுத்தி அவர்கள் விருப்பத்துக்கு உள்ளானவைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு மெசேஜ்ல மட்டும் முன்னிலைப்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது இதனை பயன்படுத்துவதால் எந்த ஃபீட் போன்றவைகளையும் நம் மீது திணிக்காது என்று கூறுகின்றனர்.
மக்கள் பல நேரங்களில் அவர்களுக்கு பிடித்த அல்லது அலுவலகவேலைகளில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு வரும் செய்தியை விரைவாக படிக்க வேண்டி இருக்கும். இந்த மெட்டா ஏஐ பயன்படுத்தி மொபைலில் இருக்கும் படிக்காத மெசேஜ்களை விரைவாக சுருக்கமாக கூறுகிறது. இதனால் பயனர்கள் தாங்கள் படிக்காத மெசேஜ்களை முழுமையாக படிக்காமல் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள்.