ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3.. 6000mah பேட்டரி.. 80w சார்ஜர்.. தெறிக்கவிடும் அம்சங்களுடன் வெளியாகும் விவோ மொபைல்.. என்ன மாடல்.?

விவோவின் பிளக்ஷிப் மாடலான x போல்டு (xfold) சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இதனை அடுத்து இந்த விவோ எக்ஸ் போல்ட் 5 மாடல் இந்தியாவில் அடுத்து வெளியாகும் என்று எதிர்பாக்கப்பட்டது. அதேபோல இந்தியாவில் இந்த மாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மொபைல் எப்பொழுது வெளியாகும் என்ற அறிவிப்பு தேதி இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

விவோ எக்ஸ் போல்ட் 5 (vivo X fold 5) :
இந்த மாடலின் சிறப்பே பெரிய டிஸ்ப்ளே உடன் அதை மடிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் 8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 2480 * 2200 பிக்சல்கள் ரிசல்யூசன் உடன் வருகிறது மேலும் ஹச் டி ஆர் 10 பிளஸ், சப்போர்ட் 4500 நிட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. மேலும் இது 120ஹச் ரெப்ரஸ்ரேட் டால்பிவிஷன் சப்போர்ட் போன்றவைகளும் இருக்கிறது.

vivo x fold 5
vivo x fold 5

அதேபோல முன்பக்க டிஸ்ப்ளே 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் கவர் அமோலட் டிஸ்ப்ளே 120 hzரெஃப்ரெஷ் ரேட்டுடன் 4500 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. பிராஸசர் அமைப்பை பொறுத்தவரை இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 உள்ளது. இதனால் இந்த மொபைலின் செயல்திறன் அதிகமாக இருக்கும். மேலும் அந்த பெரிய திரையில் கேமிங், மல்டிடாஸ்கிங் போன்றவற்றிற்கு சிறப்பாக செயல்படும்.

இந்த மாடலில் விவோவின் ஆரிஜின் ஓஎஸ் 5 மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வருகிறது. தண்ணீர் மற்றும் தூசி தடுப்பு சான்றிதழான ஐபி 69 தர ரேட்டிங் வருகிறது. இதில் கேமரா அமைப்பை பொருத்தவரை 50 எம்பி மெயின் கேமரா 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா செட்டப் கொண்டு வருகிறது. மேலும் இதில் 15mm போக்கல் லென்த் ஆப்டிகல் 3x ஜூமிங் ஜீசஸ் ஆப்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளது.

மேலும் செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு என்றே 20 எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதில் டூயல் 5ஜி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், ஐஆர்பிளாஸ்டர், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் போனில் உள்ளது.

இதில் 6000mah என்ற பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 80w ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும் 40w வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ் போல்ட் 4 விட விலை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment