120W சார்ஜிங், 50MP கேமரா… ஐகூ ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் லோடிங்

ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஐகூ 13 கிரீன் எடிஷன் ஸ்மார்ட்போனினை வருகிற 4-ம் தேதி (ஜூலை 4) அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. புதிய கிரீன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனையில் உள்ள லெஜண்ட் எடிஷன் மற்றும் நார்டோ கிரே நிற ஆப்ஷன்களுடன் இணைகிறது.

புதிய நிறம் தவிர கிரீன் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனிலும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ 13 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர், LPDDR5x அல்ட்ரா ரேம், UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 6.82 இன்ச் Q10 8T LTPO அல்ட்ரா ஐ-கேர் டிஸ்ப்ளே மற்றும் 2K ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

ஐகூ 13 ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனை 10 நிமிடங்களில் 40 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிவிடும். இத்துடன் 30 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றிவிடும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.

இவைதவிர இந்த ஸ்மார்ட்போனில் 3D அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், டெம்பர்டு கிளாஸ் ஸ்கிரீன் பாதுகாப்பு, Q2 சிப்செட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் யுஎஸ்பி 3.2 சப்போர்ட், 7K அல்ட்ரா VC கூலிங் சிஸ்டம், மான்ஸ்டர் ஹாலோ லைட் மற்றும் 72 லைட்டிங் மோட்களை கொண்டிருக்கிறது.

Leave a Comment