விவோ பொறுத்தவரை அதன் அடை மொழியான கேமரா மற்றும் மியூசிக் என்று மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளது. இன்று உலக சந்தையில் மிகவும் கேமராக்கு என்று பிரபலமான எக்ஸ் 200 ஃபேன் எடிஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. தற்போது விவோ எக்ஸ் போல்ட் 5 அறிமுகம் ஆக உள்ள நிலையில் தற்பொழுது x200 fe மொபைலும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதாவது ஜூலை மாதம் 20-ம் தேதிக்குள் இந்த மாடலின் வெளியீட்டு தேதியை அறிவிக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது. அதே நேரத்தில் x fold 5 மொபைலை வெளியிடுவதற்கான டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த வாரம் சீனாவில் இந்த இரு போன்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது.
vivo X200 fe சிறப்பம்சங்கள் :
இதில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் அமலோட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் 120 ஹெட்ஸ் ரெப்ரெஷ்ரேட்டும் ஹச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட் மற்றும் 1216x 2640 என்ற ரெசொல்யூஷன் அடிப்படையில் இதன் டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது. கேமரா அமைப்பை பொருத்தவரை 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு லன்ச் உடன் வருகிறது.
வீடியோ கால் மற்றும் செல்ஃபி போன்றவற்றிற்கு 50 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இன்டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வருகிறது. 6500mah என்ற பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 90 w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ப்ளூடூத் 5.4, nfc,usb டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் இது டைமண்ட் சிட்டி 93000 பிளஸ் என்ற ஹைஎன்ட் பிராசஸுடன் வருகிறது. இதனை சப்போர்ட் செய்யும் விதமாக 12 ஜிபி ரேம் மற்றும் 286 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது.