ஹானர் நிறுவனம் புதிய ஹானர் மேஜிக் பேட் 3 ( HONOR MagicPad 3)என்ற புதிய டேப்லெட்டை அறிமுகம் அறிமுகம் செய்துள்ளது.
ஹானர் மேஜிக் பேட் 3 மாடலின் சிறப்பு அம்சங்கள் :
இதில் 13.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 1000 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் எச்டிஆர் 10 மற்றும் 165 ஹெச் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே மல்டிமீடியா டாஸ்கிங் போது சிறப்பான வீடியோ அனுபவத்தை கொடுக்கும். ஆட்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது மேம்படுத்தப்பட்ட அதிக செயல்திறன் வழங்கக்கூடிய பிராசசர்.
மேலும் 9.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 கொண்டு இந்த டேப்லெட் இயங்குகிறது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு அப்டேட்டும் பாதுகாப்பு அப்டேட்டும் கொடுக்கப்படும். அதேபோல கேமிங் மற்றும் எடிட்டிங் வேலைகளுக்கு இதில் அட்ரினோ 750 ஜிபி யூ கிராபிக்ஸ் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 1tb வரை ஸ்டோரேஜ் செய்யும் வசதி இதில் இருக்கிறது.
இதில் 13 எம்பி மெயின் கேமரா 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஹானர் மேஜிக் பேட் 3 வீடியோ மற்றும் செல்பி எடுப்பதற்கு 9 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய 8 ஸ்பீக்கர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் வீடியோக்களை பார்க்கும்போது சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.
மேலும் டூயல் பேண்ட், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, யூஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இருக்கிறது. இதில் ஒரு பவர் பேங்க் போல 12450mah பேட்டரி உள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி கண்டிப்பாக ஒரு நாள் முழுக்க இயங்கக் கூடியது தான்.
மேலும் இதனை சார்ஜ் செய்வதற்கு 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த மாடலில் வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி கொடுத்தும் இதன் எடை 595 கிராம் மட்டுமே. இதனால் உபயோகத்திற்கு எந்த சிரமமும் இல்லாமல் இருக்கும். விலைப் பொருத்தவரை சைனாவில் 35000 பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இதே விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்ப்பும் உள்ளது.