Pebble பிராண்டின் முற்றிலும் புதிய ஸ்மார்ட் ரிங் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. Pebble ஹாலோ ஸ்மார்ட் ரிங் என அழைக்கப்படும் புதிய மாடல் ஆறுவித அளவுகளிலும், மூன்றுவித நிறங்களிலும் கிடைக்கிறது. இன்-பில்ட் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட் ரிங் எனும் பெருமையை இந்த மாடல் பெற்றிருக்கிறது. இத்துடன் ஏராளமான உடல் ஆரோக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இதில் ஹார்ட் ரேட் சென்சார்கள், இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, உறக்க பழக்கவழக்கம் மற்றும் மன அழுத்த நிலை உள்ளிட்டவைகளை கண்டறியும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய Pebble ஹாலோ ஸ்மார்ட் ரிங் சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் நான்கு நாட்கள் வரை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்கள்:
Pebble ஹாலோ ஸ்மார்ட் ரிங் மாடல் 7 முதல் 12 வரை ஆறு வித அளவுகளை கொண்டுள்ளது. இதில் 7-ம் அளவு கொண்ட மாடல் 53-55 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இந்த மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன், சருமத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்-பில்ட் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் ரிங் சாதனம் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான சான்று விவரங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த சாதனத்தில் ஏராளமான உடல்நல மற்றும் ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி, கேமிங் மற்றும் பல வசதிகள் உள்ளன. இத்துடன் இணைக்கப்பட்ட சாதனத்தின் கேமரா மற்றும் மியூசிக் உள்ளிட்டவைகளை இயக்கும் வசதியை Pebble ஹாலோ கொண்டிருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் Pebble ஹாலோ மாடல் நான்கு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் வரை ஆகும்.
இந்திய சந்தையில் புதிய Pebble ஹாலோ ஸ்மார்ட் ரிங் சாதனத்தின் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்குகிறது. இந்த மாடல் பிளாக், கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.