டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. அவை டெக்னோபோவா7 மற்றும் டெக்னோ போவா 7 ப்ரோ ஆகும். பட்ஜெட் விலையில் அறிமுகம் ஆயிருக்கும் இந்த மொபைல் வருகிற 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. பட்ஜெட் விலையில் சிறப்பம்சங்களை அள்ளிக் கொடுத்திருக்கும் இந்த டெக்னோ இந்திய சந்தையில் விவோ, ஓப்போவின் ஆதிக்கத்தை தகர்க்குமா என்று விற்பனை அன்று தெரியவரும்.

டெக்னோ போவா 7 ப்ரோ சிறப்பம்சங்கள் :
இதன் டாப் மாடல் ஆன போவா 7 ப்ரோ மொபைலில் 6.78 இன்ச் 1.5 அமலோட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 120 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருவதால் டிஸ்ப்ளே அல்ட்ரா ஸ்மூத் ரேஞ்சுக்கு இருக்கும்.
இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராஸசர் டைமண்ட்சிட்டி 7300 இது 4nm அளவில் இதன் கட்டமைப்பு இருப்பதால் இதன் பயன்பாடு இன்னும் அதிகமா இருக்கும்.
தினசரி உபயோகத்திற்கு இந்த பிராசசர் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சிறந்த முறையில் செயல்படும். ஓ எஸ் பொறுத்த வரையில் ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது. மேலும் இதற்கு சாஃப்ட்வேர் அப்டேட் செக்யூரிட்டி அப்டேட்டும் கொடுக்கப்படும் என்று டெக்னோ கூறுகிறது. கேமரா அமைப்பை பொருத்தவரையில் 64 எம்பி சோனி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
முன்புற செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பல ஏஐ பியூச்சர்களும் இடம் பெற்றுள்ளது. ரேம் அமைப்பை பொறுத்தவரை இதில் 8 ஜிபி 128 ஜிபி வேரியண்ட் மற்றும் 8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டுடன் வருகிறது. பேட்டரி பொருத்தவரை இதில் 6000mah பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை சார்ஜ் செய்வதற்கு 30 வாட் சார்ஜர் வருகிறது. இதன் விற்பனை வருகிற 10-ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது. பேஸ் மாடல் டெக்னோ போவா 12,999 ரூபாய்க்கும் டாப் மாடல் டெக்னோபாஸ் 7 ப்ரோ 17,999 ரூபாய்க்கும் இ-காமர்ஸ் தளங்களில் விற்கப்படுகிறது. மேலும் பேங்க் ஆஃபர்களை பயன்படுத்தி இன்னும் குறைவான விலையில் இந்த மொபைலை வாங்கிக் கொள்ள முடியும்.