infinix நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் வருகிற ஜூலை 11ஆம் தேதி பிரபல இ-காமர்ஸ் தளமான flipkart-ல் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் மாடல் மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மொபைலை பற்றிய லீக்ஸ் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. அதன் அடிப்படையில் இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் வந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஹாட் 60 5g பிளஸ் சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் 120ஹெச் ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. மேலும் இது பட்ஜெட் வகை பிராசஸர் ஆன மீடியாடெக் டயமண்ட்சிட்டி 7020 என்ற மிட் ரேஞ்ச் ப்ராசசர் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி பொக்கே கேமராவுடன் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். முன்புற கேமரா அமைப்பை பொறுத்தவரை 32 மெகாபிக்சல் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வசதியுடன் இந்த மாடல் வருகிறது. மேலும் இதில் மேலும் இதில் ஸ்டோரேஜ் நீட்டிப்பு வசதியும் இருக்கிறது. இரண்டு சிம் கார்டு ஒரு எஸ்டி கார்டு பயன்படுத்தும் ஸ்லாட்டும் இருக்கிறது.
ஏ ஐ அம்சங்களைப் பொறுத்தவரை ஒன் டேப் ஏஐ பட்டன் இதில் வருகிறது. மேலும் இந்த இன்பீனிக்ஸ் மொபைலில் மேம்படுத்தப்பட்ட ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்றவை கிடைக்கிறது.
குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ் டைப் சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் வருவதாக தகவல் இப்படியாகி உள்ளது. மேலும் விலை பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை இருந்தாலும் இது 15,000 பட்ஜெட்டுக்குள் வெளிவர அதிக வாய்ப்பு உள்ளது.