அடிமட்ட விலையில் இந்த ஸ்டைலிஷ் ஃபோனா..? சாம்சங் பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க..

நான் வாங்குனா சாம்சங் மொபைல் தான் வாங்குவேன் என்று அடம் பிடிபவர்களுக்கு சாம்சங் புதிய ஜாக்பாட்டை கொடுத்துள்ளது. அதிலும் ஸ்டைலிஷ் ஆன மாடல் என்றால் பிலிப் போன் தான். சாம்சங் கேலக்ஸி z flip6 5g மாடலுக்கு தற்போது அதிரடி ஆஃபரை வழங்கி இருக்கிறது இ காமர்ஸ் தளமான அமேசான்.

இந்தியாவில் இந்த மாடல் அறிமுகமாகும் பொழுது 1,09,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் இந்த பிரீமியமான பிலிப் போனுக்கு 40,000 வரை பிளாட் டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளது. அதன்படி இந்த மொபைலை 69,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் வங்கி ஆஃபர்களை பயன்படுத்தும் போது இன்னும் குறைவான விலைக்கு இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம். பலரின் கனவாக இருக்கும் சாம்சங் ப்ரீமியம் ஃபோன்களில் ஒரு மாடலான பிலிப் போன் தற்போது அடிமட்ட ஆஃபரில் கிடைப்பது நிச்சயம் கொடுக்கிற காசுக்கு சிறந்த மொபைல் என்றே சொல்லலாம்.

sasung z flip6 5g
sasung z flip6 5g

சாம்சங் கேலக்ஸி z flip6 5g  சிறப்பம்சங்கள் :
இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிலிப் 6 5ஜி ஆனது ஃபுல் ஹெச்டி பிளஸ் 120 hz ரெஃப்ரெஷ் ரேட் உடன், 6.7 இன்ச் அளவுள்ள சூப்பர் அமலேட் டிஸ்ப்ளே வருகிறது. இந்த போனில் 60 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட்டுடன் 3.4 இன்ச் சூப்பர் அமலேட் கவர் டிஸ்ப்ளே இருக்கிறது.

மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசசர் கொண்டு இயக்கப்படுகிறது. இதனால் அல்டிமேட் செயல்திறன் மற்றும் பயன்படுத்துவதற்கு மிகவும் ஸ்மூத்தாகவும் எளிமையாகவும் இருக்கும். கேமராவை பொறுத்த வரை இந்த மொபைலில் 50 mp மெயின் கேமரா மற்றும் 12 mp அல்ட்ரா வைடு கேமரா கொண்டு வருகிறது.

சாம்சங் கேமராவை பற்றி பெரிதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அதன் பிக்சர் குவாலிட்டி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். கேமராவுக்கு என்று சாம்சங் மொபைல் வாங்கும் நபர்களுக்கு இந்த மொபைல் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். முன்பக்கத்தில் செல்பி கேமராவை பொறுத்தவரை 10 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 4000mah பேட்டரி உள்ளது இதை சார்ஜ் செய்வதற்கு 25w வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் பிரியர்கள் இந்த பிரீமியம் வசதியில் கிடைக்கக்கூடிய மொபைலை சிறந்த தள்ளுபடி விலையை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Comment