ப்ளிப் போன்களில் புது உச்சம்… முடிச்சிவிடும் ஹானர்… வெளியான முக்கிய தகவல்..!

ஹானர் நிறுவனம் தனது மேஜிக் வி5 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை சமீபத்தில் தான் வெளியிட்டது. தற்போதைக்கு இந்த சாதனம் உருவாகி இருப்பதும், வெளியிடப்பட இருப்பதும் தெரிவிக்கப்பட்டது. புதிய சாதனம் பற்றி ஹானர் உறுதிப்படுத்திய நிலையில், தற்போது மேஜிக் வி ப்ளிப் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் லீக் ஆக தொடங்கியுள்ளது.

ஏற்கனவே மேஜிக் வி ப்ளிப் 2 குறித்து வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் FHD+ LTPO OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் வெளிப்புறத்தில் 4 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. இதில் வழங்கப்படும் உள்புற டிஸ்ப்ளே LTPO தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் என்றும் இதனால், இந்த மாடலில் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ப்ளிப் போன் மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படலாம். இதில் வழங்கப்படும் சரியான பிராசஸர் எது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், இதில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 அல்லது அதற்கு இணையான சிப்செட் வழங்கப்படலாம்.

புகைப்படங்கள் எடுக்க ஹானர் மேஜிக் வி ப்ளிப் 2 மாடலில் 50MP பிரைமரி கேமராவுடன், டூயல் கேமரா செட்டப் வழங்கப்படும். இதில் ஒன்று அல்ட்ரா-வைடு லென்ஸ் ஆக இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மிகமுக்கிய அம்சமாக இதில் வழங்கப்படும் பேட்டரி இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், புதிய மேஜிக் வி ப்ளிப் 2 ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 5500mAh பேட்டரி வழங்கப்படலாம்.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட முதல் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹானர் மேஜிக் வி ப்ளிப் 2 மாடல் பெறும். முன்னதாக ஹானர் மேஜிக் வி ப்ளிப் மாடலில் 4800mAh பேட்டரி தான் உள்ளது. மேலும், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 ஸ்மார்ட்போன் 4300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 66 வாட் அல்லது 80 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும்.

புதிய ப்ளிப் போனின் அம்சங்கள் மற்றும் வெளியீடு குறித்து ஹானர் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த ஆண்டு ஹூவாய், சியோமி மற்றும் ஹானர் மட்டுமே புதிய ப்ளிப் போன் மாடலை அறிமுகம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment