ஆண்ட்ராய்டு மொபைல்களில் தற்போது அனைவரும் கூகுளிடம் இருந்து வாங்கி தான் os யை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை ஆண்ட்ராய்டு மொபைலுக்கு என்று இந்த ஓஎஸ் தயாரிப்பும் இருந்ததில்லை. அந்த வகையில் தற்போது எல்இடி என்எக்ஸ்டி குவாண்டம் ஷிப்ட் டெக்னாலஜிஸ் என்ற புதிய ஓ எஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பு ai உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த ஓஎஸ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதை realme இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய முந்தைய சிஇஓவான மாதவ் ஷேத் தலைமையில் தான் இந்த ஓஎஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏஐ பிளஸ் பல்ஸ் மற்றும் நோவா என்கிற 4g மற்றும் 5g மொபைலில் இந்த ஓஎஸ் பயன்படுத்தப்படுகிறது.

இதில் மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் 5,000 ரூபாய்க்கு இந்த மொபைல் விற்பனைக்கு வர உள்ளது. இதை அறிமுகப்படுத்தும்போது அவர்கள் சொல்வது, ”உங்கள் போன் உங்களுக்காகத்தான் வேலை செய்யும் உங்களுக்கு எதிராக ஒருபோது வேலை செய்யாது. மேலும் உங்களுடைய டேட்டாக்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள கிளவுட் ஸ்டோரேஜில் மட்டுமே சேமிக்கப்படும். இதனால் டேட்டா திருடு போவதை பற்றி கவலை பட தேவை இல்லை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.” என்று நிறுவனம் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட இந்த மொபைல் நாளை அதாவது ஜூலை 8-ம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ai + பல்ஸ் மற்றும் நோவா 5ஜி ஃபோன்களின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.
இதில் 6.8 இன்ச் 120hz ரெஃப்ரெஷ் ரேட்டு உடன் எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா 50 மெகா பிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் உடன் வருகிறது. செல்பி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்சல் உடன் வருகிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்டில் கிடைக்கிறது. மெமரி கார்டு 1 டிபி வரை அதிகரித்து கொள்ளலாம். பிராசசர் பொருத்தவரை இதில் யூனிசாக் t8200 பயன்படுத்தப்படுகிறது. மேலும் 5000mah பேட்டரி மற்றும் 33w ஃபாஸ்ட் சார்ஜ் என்று லீக்ஸ் இன் அடிப்படையில் தகவல்கள் வெளியாகி உள்ளது.