தேதி குறிச்சாச்சு..6500mah பேட்டரி.. 90w சார்ஜர்.. சோனி கேமரா.. இனிமேல் இதுதான் பிளாக்ஷிப் கிங்கா..? என்ன மாடல்

இந்திய சந்தையில் விவோவின் பிளாக்சிப் மாடலான விவோ எக்ஸ்போல்ட் 5 ஜூலை 14ஆம் தேதி இ-காமர்ஸ் தளங்களில் வெளியாகிறது.

விவோ எக்ஸ்போல்ட் 5 அம்சங்கள் :
இதில் மடிக்கக் கூடிய வகையில் 8 இன்ச் அளவுள்ள எல்டிபிஓ அமலோட் டிஸ்ப்ளே 120ஹச் ரேட்டுடன் 1 பில்லியன் கலர்ஸ் மற்றும் ஹச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட் டால்பி விஷன் சப்போர்ட் மற்றும் 4500 பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 15 os உடன் வருகிறது.

கேமரா அமைப்பை பொறுத்தவரை 50 எம்பி சோனி சென்சார் உடன் மெயின் கேமரா வருகிறது. மேலும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் வருகிறது. முன்புற கேமரா அமைப்பை பொறுத்தவரை 20 எம்பி மெயின் கேமரா மற்றும் 20 எம்பி வைடு ஆங்கிள் என டூயல் பிரண்ட் கேமரா வருகிறது.

பிராசசர் பொருத்தவரை இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 உடன் வருகிறது. மேலும் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகிறது. பேட்டரி அமைப்பை பொருத்தவரை 6000mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 90w சார்ஜிங் வசதியும் உள்ளது. ரேம் அமைப்பை பொருத்தவரை 12 ஜிபி ரேம் 256 ஸ்டோரேஜ் வேரியன்ட். 12 ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் என இரு வகைகளில் கிடைக்கிறது.

மாடலின் விலை பொருத்தவரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சீனாவில் விற்கப்படும் விலை அடிப்படையில் இந்திய மதிப்பில் 1, 39,9999 ரூபாயாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment