தேதி உறுதியாச்சு.. மார்க்கெட்டை பொளக்க வரும் புதிய ரியல்மீ போன்.. என்ன மாடல் ?

பட்ஜெட் விலையில் அசர வைக்கும் அம்சங்களுடன் இந்திய சந்தையில் மொபைல்களை விற்று வரும் ரியல்மீ தற்போது புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 24-ம் தேதி ரியல்மீ 15 ப்ரோ 5g மொபைல் இந்தியாவில் வெளியாக உள்ளது.

ரியல்மீ 15 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் பிளாட் பாட்டம் அமலோட் 120hz ரெப்ரெஷ் ரேட்டு உடன் 3000 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் 240hz டச் சாம்பலிங் ரேட் உடன் சிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை கொடுக்கிறது. பிராசசர் பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வசதியுடன் வருகிறது. முந்தைய ஜெனரேஷன் உடன் இந்த ப்ராசசர் மேம்படுத்தப்பட்டு பயன்படுத்துவதற்கு ஸ்மூத்தாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தினசரி உபயோகத்திற்கு ஏற்றதாக இருக்கும் கேமரா அமைப்பை பொறுத்தவரை 50 எம்பி ட்ரிபிள் ரியல் கேமரா உடன் வருகிறது. இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்கலாம். அதே போல முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரை 32 மெகாபிக்சலுடன் வருகிறது. 8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம்+ 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ரியல்மீ 15 ப்ரோ 5ஜி மாடல் விற்பனைக்கு வருகிறது.

மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டு இதில் உள்ளது. பேட்டரியை பொருத்தவரை 6000mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 80w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உடன் வருகிறது. பெரிய பேட்டரி என்பதால் ஒருநாள் முழுக்க இதன் பயன்பாடு வரும். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஏ ஐ எடிட், எஐ பார்டி போன்ற ஏஐ சிறப்பு அம்சங்கள் இந்த ரியல்மி போனில் இடம் பெற்றுள்ளது.

இதில் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியுடன் வருகிறது. மேலும் 4g, 5g, wi-fi, gps usb டைப் சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் உள்ளது. விலைப் பொருத்தவரை இந்த மொபைல் 24,999 ரூபாய் ரூபாய்க்கு மிட் ரேஜ் பட்ஜெட் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment