சைனீஸ் மொபைல் நிறுவனமான இன்பீனிக்ஸ் இந்தியாவில் இன்று பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் விவோ மற்றும் ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக சிறப்பான அம்சங்களை கொடுத்து இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் மொபைலை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் சிறப்பம்சங்கள் :
இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஹச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இது 120hz ரெஃப்ரஸ் ரேட் உடன் 700 நினிட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. மேலும் இதில் பஞ்ச் ஹோல் ஸ்டைலில் டைனமிக் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. பிராசஸரை பொருத்தவரை இதில் டைமண்ட் சிட்டி 7020 என்ற ஆக்டோ கோர் ப்ராசசர் உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 15 os உடன் எக்ஸ்ஓஎஸ் 15 உடன் இயங்குகிறது. கேமரா பொருத்தவரை இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும் 2 மெகாபிக்சல் போர்ட்ரைட் லென்ஸ் உடன் வருகிறது. முன்புற வீடியோ கால்கள் மற்றும் செல்ஃபி போன்றவற்றிற்கு 8 மெகாபிக்சல் கொண்ட முன்புற கேமரா வருகிறது. பேட்டரி பொருத்தவரை இதில் 5200mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 18w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
மேலும் இதில் கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆன wi-fi, ப்ளூடூத், என்எப்சி, யூஎஸ்பி டைப் சி போன்றவை வழங்கப்படுகிறது. விலை பொறுத்தவரை 6ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 10,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேங்க் ஆஃப்பர் பயன்படுத்தும் போது இன்னும் விலை குறைவாக இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம். வருகிற ஜூலை 17ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் இணையதளத்தில் இந்த இன்ஃபினிட்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் மொபைல் விற்பனைக்கு வரவுள்ளது.