டைமன் சிட்டி 8450.. புதிய ஃபிளாக்ஷிப் அரக்கனை வெளியிடும் ஓப்போ.. என்ன மாடல் ?

சமீபத்தில் oppo நிறுவனம் oppo k13x மாடலை இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஆறுமுகம் செய்து வந்தது. விளக்கேற்ற அம்சங்களுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் oppo நிறுவனம் k13 சீரியஸில் பிளக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஓப்போ k13 டர்போ சீரியஸ் மாடலை சீனாவின் வருகிற ஜூலை 21 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதில் k13 turbo மற்றும் k13 turbo pro என இரண்டு மாடலில் வெளிவர இருக்கிறது. இரண்டு மொபைல்களிலும் ஹையர் எண்டு ப்ராசசர் உடன் ஆல் ரவுண்டர் மொபைலாக வர உள்ளது. இந்த மாடல் பற்றிய முழு சிறப்பம்சங்கள் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இருப்பினும் இதன் லிக்ஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

oppo k13 turbo சிறப்பு அம்சங்கள் :
இதில் 6.8 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி டிஸ்ப்ளே 2200 * 1280 பிக்சல் resolution உடன் 144 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இந்த மாடல் வெளிவருகிறது. மேலும் இது பிளாட் டிஸ்ப்ளே ஆக வரவுள்ளது. பிராஸசர் பொருத்தவரை அடிப்படை மாடலில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 8450 எஸ்ஓசி கொடுக்கப்பட்டுள்ளது. snapdragon 8s ஜென் 4 சிப்செட் உடன் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஒரு ஆல் ரவுண்டர் ப்ராசசர் என்றே சொல்லலாம். கேமிங், எடிட்டிங், மல்டி டாஸ்கிங் போன்ற அனைத்து செயல்களுக்கும் இந்த மாடல் எந்தவித தடையும் இன்றி ஸ்மூத்தாக இயங்கக் கூடியதாக இருக்கும். மேலும் இதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக 16 ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுடன் வருகிறது.

மேலும் இது எல்பிடிடிஆர் 5 எக்ஸ் ரேம் அமைப்புடனும் யுஎஃப்எஸ் 4.0 உடன் வருகிறது. இதனால் ரீட், ரைட் மிக வேகமாக இருக்கும். மொபைல் எந்தவித இடையூறும் இன்றி மிகவும் ஸ்மூத்தாக இயங்கும். கேமரா பொருத்தவரை இதில் 50 எம்பி sony கேமரா உடன் வருகிறது. மற்றும் 2 எம்பி டெப்த் லென்ஸ் உடன் வருகிறது.

முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்சலுடன் வருகிறது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 15 os உடன் வருகிறது. மேலும் விவரங்கள் மொபைல் வெளியாகும் அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதன் விலை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பட்ஜெட் ரேஞ்சில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment