அமேசான் பிரைம் டே சேல் இன்று முதல் தொடங்குகிறது. அதாவது ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏராளமான ஆபர்களை அள்ளி வழங்கி வருகிறது அமேசான். அந்த வகையில் மொபைல்களுக்கு சிறந்த ஆபர்களை கொடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான சாம்சங் எம்36 5g மொபைல் ஆஃபர் விலையில் கிடைக்கிறது.
நான் வாங்கினால் சாம்சங் மொபைல் தான் வாங்குவேன் என்று அடம்பிடிக்கும் சாம்சங் பிரியர்களுக்கு இந்த ஆஃபர் சிறந்த ஆபராக இருக்கும். இதன் 6ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 17,499 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இதற்கு 1000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பேங்க் ஆபர் போன்றவற்றை பயன்படுத்தி 15 ஆயிரம் பட்ஜெட்டில் கூட இந்த மொபைலை வாங்கலாம். இது ஒரு சிறந்த ஆபராக இருக்கும். மேலும் இதில் 8ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டும் இருக்கிறது.
samsung m36 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் அளவு கொண்ட சூப்பர் அமலோட் டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூசனுடன் 120hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இது கார்ணிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு அம்சத்துடன் இந்த டிஸ்ப்ளே கிடைக்கிறது. பிராசசர் பொருத்தவரை இதில் samsung நிறுவனத்தின் சொந்த பிராசசர் ஆன எக்சினோஸ் 1380 சிப்செட் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 os கொண்டு இயங்குகிறது. இதற்கு 6 வருட சாஃப்ட்வேர் அப்டேட் 6 வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் உறுதியளித்திருக்கிறது. கேமராவை பொறுத்த வரை இதில் 50 மெகாபிக்சல் ஓஐ எஸ் உடன் முதன்மை கேமரா வருகிறது. 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸுடன் லேயர் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது.
மேலும் முன்புற செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் கொண்டு வருகிறது. இதில் 5000mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு 25w பாஸ்ட் சார்ஜ் வசதியும் உள்ளது. மேலும் இதில் வைஃபை, 5g,4g ப்ளூடூத், என்எஃப்சி, டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.