கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கென பிரத்யேக எடிஷனாக ரியல்மீ 15 ப்ரோ அறிமுகமாகியிருக்கிறது. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ரியல்மீ 15 ப்ரோ – கேம் ஆஃப் த்ரோன்ஸ் எடிஷன்
இந்தியாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட மொபைல் நிறுவனமான ரியல்மீ, தனது 15 ப்ரோ எடிஷனை கடந்த ஜூலை மாதம் ரூ.38,999 என்கிற விலையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், இதன் அப்டேட்டட் எடிஷனாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கென ஸ்பெஷல் எடிஷன் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ரியல்மீ 15 ப்ரோ கேம் ஆஃப் த்ரோன்ஸ் எடிஷனில், வழக்கமான எடிஷனில் இருக்கும் வசதிகளோடு சில கூடுதல் வசதிகளையும் ரியல்மீ சேர்த்து அப்டேட் செய்திருக்கிறது. அதாவது வழக்கமான 12 ஜிபி ரேம், 512 ஜிபி ரோம் வசதிகொண்ட மாடல் ஸ்பெஷல் எடிஷன் பேக் கவரோடு, கேமராவில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஃபில்டர்கள் சிலவற்றோடு விலையும் அதிக ரேஞ்சில் அறிமுகமாகியிருக்கிறது.
வசதிகள்
- 6.8 இன்ச் 144 ஹெர்ட்ஸ் ஓஎல்ஈடி டிஸ்பிளே
- கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு
- ஐபி 68 மற்றும் ஐபி 69 பாதுகாப்பு (இதன்மூலம் 1.5மீ ஆழத்தில் கூட போன் தண்ணீர் புகாமல் 30 நிமிடங்கள் வரை பாதுகாப்பாக இருக்கும்)
- குவால்கம் 7 4-வது தலைமுறை புராசஸர்
- ரியல்மீ 6 யூஐ உடன் இயங்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 80வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 7000mAh பேட்டரி திறன்
எங்கே கிடைக்கும்?
ஃப்ளிப்கார்ட் தளம் அல்லது ரியல்மீ ஆன்லைன் ஸ்டோர்களில் ரியல்மீ 15 ப்ரோ கேம் ஆஃப் த்ரோன் ஸ்பெஷல் எடிஷன் மொபைலை நீங்கள் ஆர்டர் செய்துகொள்ள முடியும்.