உங்க ஆண்ட்ராய்ட் போனில் மறந்தும் கூட இதை செய்யாதீங்க!

Android Phone: தற்போதைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்ட் போன் வைத்துக்கொள்வது சாதாரணமாக விஷயமாகி விட்டது. பொழுது போக்கிற்காகவோ, வேலை சம்பந்தமாகவோ பல்லாயிரம் மதிப்பில் போனை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். 

ஆனால் உங்கள் ஆண்ட்ராய்ட் போனை நீங்க செய்யும் விதத்தை வைத்தே அதன் ஆயுளை பாதுகாக்க முடியும். இதில் நீங்க செய்யும் சில தவறை தெரிந்து கொண்டு அதை தவிர்க்க பாருங்கள். அப்பொழுது உங்க போனை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். 

சாஃப்ட்வேர் அப்டேட்: உங்களுடைய போனுக்கு சரியான கால அளவில் வரும் சாஃப்ட் அப்டேட்களை மறக்காமல் தவறாமல் அப்டேட் செய்து விடுங்கள். அது உங்கள் மொபைலின் ஆயுட்காலத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவும். 

ரீஸ்டார்ட் செய்ய மறக்காதீர்கள்: அடிக்கடி போனை ரீஸ்டார்ட் செய்ய மறக்காதீர்கள். இதனால் மெமரியை சரி செய்து போனை எப்போதும் நல்ல செயல்பாட்டுடன் வைத்து கொள்ள உதவும். 

தெரியாத ஆப்களை டவுன்லோட் செய்யாதீர்கள்: கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யும் ஆப்களை தவிர மற்ற ஆப்களை எப்போதுமே டவுன்லோட் செய்யாதீர்கள். அது மால்வேர் அல்லது வைரஸ்களாக இருக்கலாம். 

ஆப் பெர்மிஷன்கள்: ஒரு ஆப்பை டவுன்லோட் செய்தவுடன் அதற்கு எந்த பெர்மிஷன் கேட்டாலும் உடனே கொடுத்து விடாதீர்கள். கேமரா, போட்டோஸ் உள்ளிட்ட பெர்மிஷன்கள் அந்த குறிப்பிட்ட ஆப்பிற்கு தேவையா என்பதை யோசித்த பின்னர் முடிவெடுங்கள். 

பேட்டரி சார்ஜ்: உங்களுடைய போனின் சார்ஜை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டாம். அல்லது முழுமையாக காலி செய்து விடவும் வேண்டாம். 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டோரேஜை நிரம்ப விடாதீர்கள்: ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் போனின் டேட்டாவை அழித்தும், தேவையானதை வேறு இடத்தில் பாதுகாத்து கொண்டு போனை சரியான ஜிபியை காலியாக வைத்து கொள்ளுங்கள்.

பாதுகாப்பு லாக்குகள் முக்கியம்: ஒரு போனை பயன்படுத்து போது லாக்கை வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு பேட்டர்ன், பின், கைரேகை லாக் வைத்து கொள்வது உங்க போனை சேவ்வாக வைத்து கொள்ள உதவும். 

Cacheஐ அடிக்கடி அழிக்க வேண்டாம்: ஒரு போனில் இருக்கும் சில ஆப்களை வேகமாக cache உதவும். இதனை அடிக்கடி அழித்தால் மீண்டும் ஆப்பை மெதுவாக மாற்றி விடும். 

டெக் நிபுணர்கள், ஆண்ட்ராய்ட் என்பது திறந்த அமைப்பு என்பதால் ஒரு சின்ன தப்பு கூட மொத்த திறனையும் காலி செய்துவிடும். பாதுகாப்பாக பராமரித்தாலே போனை பல நாட்களுக்கு தாக்குபிடிக்க வைக்கும் எனத் தெரிவிக்கின்றனர். 

Leave a Comment