நடுத்தர மக்களின் கனவில் மண்ணை வாரி போட்ட தங்கம் விலை

தங்கம் விலை முதல்முறையாக ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி புதிய வரலாறு படைத்தது..

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது.இதன் மூலம் நடுத்தர மக்களின் தங்கத்தின் மீதான ஆசையில் மண்ணை அள்ளி போட்டுள்ளது தங்கம் விலை.

அமெரிக்கா- சீனா வர்த்தக போர், பெடரல் வங்கி வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களே தங்கத்தின் விலை ஏற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

 

Leave a Comment