Honor Robot Phone: மொபைல் கேமராவின் எதிர்காலம் இதுதானா?

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான Honor நிறுவனம், எதிர்காலத்தில் மொபைல் போன் கேமராக்களில் புது அத்தியாத்தை Honor Robot Phone மூலம் எழுதியிருக்கிறது.

Honor Robot Phone-ல் என்ன ஸ்பெஷல்?

Honor நிறுவனத்தின் மேஜிக் 8 சீரிஸ் அறிமுக விழாவில் அந்த நிறுவனம், Honor Robot Phone என்கிற புதிய கேமரா டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது வழக்கமான ஸ்மார்ட்போன் கேமரா போல் அல்லாமல், போனிலிருந்து கிம்பல் போல் எழுகிறது.

இதன்மூலம், போனைத் திருப்பாமலேயே எந்தத் திசையில் வேண்டுமானாலும் கேமராவைத் திருப்பி நீங்கள் போட்டோ, வீடியோக்கள் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவையே ஹானர் இந்த நிகழ்ச்சியில் காட்டியிருந்தது.

இந்த புதிய ரோபோட்டிக் போன் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், இந்த வீடியோ பெரும்பாலும் ஏஐ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

ஏற்கனவே இதேபோன்று பாப்-அப் கேமராக்களுடன் வெளிவந்த மொபைல் போன்கள், வந்த வேகத்தில் மார்க்கெட்டில் இருந்து மாயமானதை ஹானர் நிச்சயம் மறந்திருக்காது என்று நம்புவோம்.

மொபைல் போனில் நகரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பேர் பார்ட்ஸ்கள் கொண்ட மொபைல் போன்கள் மார்க்கெட்டில் வெற்றியை நெருங்கியது கூட கிடையாது என்பதுதான் டிராக் ரெக்கார்டு. அந்தத் தடையை Honor Robot Phone உடைக்கிறதா என்று பார்க்கலாம்.

Leave a Comment