தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கிறது. தங்கத்தைப் பாரம்பரியமாக முதலீடாகக் கருதும் சூழலில், நீங்கள் Digital Gold மீதும் முதலீடு செய்ய முடியும்.
Digital Gold என்றால் என்ன?
வழக்கமாக நீங்கள் கடையில் சென்று நகையாகவோ அல்லது காயினாகவோ வாங்கும் தங்கத்துக்கு டிஜிட்டல் முறையிலான மாற்றுதான் இந்த Digital Gold முறை. இதன்மூலம், நீங்கள் 24 கேரட் தங்கத்தின் மீது டிஜிட்டலாகவே முதலீடு செய்ய முடியும். கையில் வாங்கி, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் டிஜிட்டலாக ஒரு குறிப்பிட்ட எடையுள்ள தங்கத்தை வாங்கும்போது, நம்பகத்தன்மை மிக்க முதலீட்டு நிறுவனங்களான Augmont, MMTC-PAMP, or SafeGold ஆகியவை மூலம், அதே அளவு தங்கம் வாங்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும். அதன்பின்னர், உங்களது தங்கம் தொடர்பான பரிவர்த்தனைகள் டிஜிட்டலாகவே மேற்கொள்ளப்படும்.
Digital Gold ஏன் நம்பகமானது?
பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்கிற அச்சம் இல்லை
வழக்கமாக நகைக்கடைகளில் வாங்கும் தங்கம் போலல்லாமல், 24 கேரட் தங்கமானது 99.99 சதவிகிதம் சுத்தமானது.
ஒரு ரூபாய் தொடங்கி நீங்கள் விரும்பும் தொகையை இதில் முதலீடு செய்ய முடியும். அதேபோல், நீங்கள் விரும்பும் நேரத்தில் எளிதாக விற்கவும், வாங்கவும் முடியும். இதற்கான நடைமுறைகள் ரொம்பவே எளிது.
இந்த Digital Gold-ஐ கீழ்க்காணும் ஆப்ஸ் மூலமாக நீங்கள் வாங்க முடியும்
Airtel Payments Bank – SafeGold நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் மூலமாக டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்..
Google Pay – இந்த ஆப் MMTC-PAMP உடன் இணைந்து டிஜிட்டல் தங்கத்தில் முதலீட்டுக்கான வாய்ப்பை வழங்குகிறது.
Groww – முதலீடாக மட்டுமல்லாமல், உங்களுக்குத் தேவைப்படும் தங்கத்தை இந்த செயலி Augmont உடன் இணைந்து விற்பனை செய்கிறது.
PhonePe – இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் மற்றொரு யுபிஐ ஆப் இது. இந்த ஆப், MMTC-PAMP, SafeGold, மற்றும் Jar நிறுவனங்களோடு இணைந்து டிஜிட்டல் தங்கம் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறது.
Amazon Pay – நீங்கள் Amazon Pay மூலமாகவும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். டிஜிட்டல் தங்கம் விற்பனை மற்றும் பாதுகாப்பாக அதை வைப்பதற்கும் SafeGold நிறுவனத்தோடு அமேசான் கைகோர்த்திருக்கிறது.
மற்றெந்த முதலீடுகளைப் போலவே டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதிலும் ரிஸ்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால், முதலீடு செய்வதற்கு முன்னர், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இதில் நீங்கள் முதலீடு செய்யலாம்.