Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட தளத்தில் இருக்கும் பயணங்களை சைபர் குற்றம் மற்றும் ஆன்லைன் ஸ்கேமில் இருந்து பாதுகாக்க முடியும்.
இது மட்டுமில்லாமல் முதியவர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முக்கிய இந்திய நகரங்களில் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறது.
மெட்டா ஆப்களில் உருவாக்கப்பட்டிருக்கும் Anti-scam features:
இந்த புதிய சேவையின் மூலம் இனி வாட்ஸ் அப்பில் பயனர்கள் தங்களுடைய ஸ்கிரீனை மற்றவர்களுக்கு வீடியோ காலில் ஷேர் செய்யும் போது எச்சரிக்கை கொடுக்கும் ஸ்கிரீன் தோன்றும். இதன் மூலம் ஸ்கேனர்கள் வங்கி கணக்கின் தகவல்களை எடுப்பதை தவிர்க்க முடியும்.
பேஸ்புக் மெசஞ்சரில் ஏ ஐ வசதி கொண்ட ஸ்கேன் டிடெக்ஷன் பொருத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் சந்தேகப்படும் வகையில் புதிய கணக்கிலிருந்து மெசேஜ் வந்தால் அதுகுறித்து பயனருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். மேலும் பயனர்கள் சந்தேகம் ஏற்பட்டால் தெரியாத நபர்களின் சேட்டை ஸ்கேம் பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.
இது மட்டுமில்லாமல் பேஸ்புக், messenger மற்றும் வாட்ஸ் அப்களை Passkeys போட்டு கொள்ளலாம். பயோமெட்ரிக் மூலமும், பின் நம்பர் மூலமாகவும் இதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். மெட்டா பேஸ்புக்கில் இந்த சேவையை 2025 ஜூன் மாதமே கொண்டு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மெட்டா நிறுவனம் தன்னுடைய ஆப்களில் அதிகமாக பாதுகாப்பு மற்றும் பிரைவசிக்கான வசதிகளை கொண்டு வந்திருக்கிறது. பயனர்கள் தங்களுடைய கணக்கை அடிக்கடி பாதுகாப்பு சோதனை செய்து கொள்வது நல்லது.
பேஸ்புக் கணக்குகளில் அடிக்கடி பாஸ்வேர்ட்களை அப்டேட் செய்து கொள்வது நல்லது.. அது போல வாட்ஸ் அப்பில் உங்களுடைய நம்பரை குரூப்புகளில் சேர்க்கும் வசதி குறித்த சேவையை ஆன் செய்து வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஸ்கேனர்கள் உங்கள் எண்ணை தேவையில்லாத குரூப்களில் சேர்ப்பதை தவிர்க்க முடியும்.