பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Me Meme
கூகுள் போட்டோஸின் இந்த புதிய வசதிக்கு Me Meme என்று பெயரிடப்பட்டிருக்கிறது. செய்தி நிறுவனம் ஒன்று கூகுள் செயலிகளின் APK ஃபார்மேட்டுகளை ஒரு செய்திக்காக ஆய்வு செய்தபோது கூகுள் போட்டோஸ் v7.51.0-ல் இந்த வசதியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இது பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இப்போது ஆக்டிவாக இல்லை. எனவே, இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. கூகுள் போட்டோஸில் இந்த வசதியைப் பயன்படுத்தி, உங்கள் போட்டோவை அப்லோட் செய்தால், பிரபலமான மீம் டெம்ப்ளேட்டுகளை, அந்த போட்டோவை வைத்து உருவாக்கிக் கொள்ளலாம்.

அதேபோல், தேவையான ரெஃபரன்ஸ் போட்டோ அல்லது மீம் டெம்ப்ளேட்டையும் பயனாளர்கள் தேர்வு செய்து, அதில் தங்கள் போட்டோக்களை இடம்பெறச் செய்ய முடியும். இது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு கூகுள் போட்டோஸில் இடம்பெற இருக்கிறது.