ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் OpenAI Sora!

OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

OpenAI Sora

ChatGPT மூலம் ஏஐ தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய OpenAI நிறுவனம், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் 2025-ல் ஏஐ மூலம் வீடியோ எடிட் செய்யும் செயலியான Sora-வை அறிமுகப்படுத்தியிருந்தது.

முதல்கட்டமாக ஆப்பிளின் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, இன்ஸ்டண்ட் ஹிட்டானது. ஐஸ்டோரில் அறிமுகமான சில வாரங்களிலேயே மில்லியன் கணக்கான பயனாளர்கள், அதை பயன்படுத்தத் தொடங்கினர்.

OpenAI Sora – வசதிகள்

OpenAI-ன் Sora-வைப் பயன்படுத்தி நீங்கள் பல்வேறு விதமான ஏஐ வீடியோக்களை உருவாக்க முடியும். தெளிவான பிராப்ம்ட் மூலம் சிறு, குறு வீடியோக்களை இசையுடன் நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். ஏஐ மூலம் போட்டோக்களை ஜெனரேட் செய்துகொண்டிருந்த பயனாளர்களுக்கு இந்த வசதி மூலம் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தது அந்த நிறுவனம்.

அதேபோல், வீடியோவில் இருக்கும் குறிப்பிட்ட கேரக்டரை மட்டும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறொரு கேரக்டரை உள்ளிடுவது, தானியங்கி முறையில் இசையைக் கோர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இருக்கின்றன.

இந்தநிலையில், ஐஓஎஸ் பயனாளர்களைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் OpenAI Sora விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது அடுத்த ஓரிரு வாரங்களில் நிகழலாம் என்று இப்போதே டெக் உலகில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. ஆண்ட்ராய்டு யூஸர்ஸே தயாராகிட்டீங்களா?

Leave a Comment