உலகின் முன்னனி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் ஏஐ உதவியோடு பயனாளர்களின் வயதை சரிபார்க்கும் AI age verification முறையைக் கொண்டுவந்திருக்கிறது. இதனால் என்னவெல்லாம் நடக்கும்?
AI age verification
வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்ப உலகின், அதன் பயன்பாடு கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ உதவியோடு வீடியோக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையி, ஏஐ உதவியோடு பயனாளர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களா என்பதைக் கண்டறிய AI age verification முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது யூடியூப்.
இதன்படி, பயனாளர்கள் தங்களை செல்ஃபி எடுத்து அப்லோட் செய்ய வேண்டும். அந்த போட்டோவை ஏஐ உதவியோடு பரிசீலித்து, அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை யூடியூப் அடையாளம் கண்டுகொள்ளும்.
இதனால் என்ன நடக்கும்?
ஒருவேளை நீங்கள் 18 வயதுக்குட்பட்டவர் என்று யூடியூப் கண்டுகொண்டால், சில கட்டுப்பாடுகள் உங்கள் கணக்குக்கு விதிக்கப்படும். குறிப்பிட்ட சில வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியாமல் போகும். அதேபோல், Parental Control போன்ற அம்சங்களோடு, தாமாகவே இடைவெளி எடுத்துக்கொள்ள, உறங்கும் நேரம் போன்ற நோட்டிபிகேஷன்களும் உங்களுக்கு வரும்.
அதேநேரம், உரிய கணக்கோடு யூடியூபைப் பயன்படுத்தி வரும் 18 வயதுக்கு மேற்பட்ட சில பயனாளர்களை இந்த அம்சம் குழந்தைகளாகத் தவறாக அடையாளம் கண்டுகொண்டதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இது நெட்டிசன்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தவறை யூடியூப் விரைவில் சரிசெய்ய வேண்டும் என்ற குரல்களும் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கின்றன.