Live Location: இன்றைக்கு அனைவரும் WhatsApp, Google Maps போன்ற செயலிகளில் “லைவ் லொகேஷன்” பகிரும் வசதியை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இது நண்பர்கள், குடும்பத்தினர் நம்மை எங்கு எப்படி இருக்கிறோம் என்பதை தெரிஞ்சிக்க உதவும்.
ஆனா, இந்த லைவ் லொகேஷன் இடத்தை மட்டுமல்ல நம்முடைய மற்ற சில தகவல்களையும் கசிய விடுகிறதாம்.
- நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது மட்டுமல்லாமல், உங்களுடைய வாகனம், திசை, வேகத்தை கூட கணிக்கிறது.
- மேலும், முக்கிய செயலிகள் சிலவற்றில் உங்கள் பேட்டரி தகவல் கூட தெரியும்.
- உங்களுக்கு நெட் இல்லை என்றால் கூட உங்கள் கடைசி இருப்பிடத்தினை தெரிஞ்சிக் கொள்ளலாம்.
- சிலவற்றில் உங்கள் பெயர் மற்றும் படம் கூட தெரியும்.
இது ஏன் பிரச்சனை?
வசதியானதாக இருந்தாலும், நீண்ட நேரம் லொகேஷன் பகிர்வதால்
- நீங்கள் எங்கு இருக்கிறீர்களா, அலுவலகத்திலா, அல்லது எங்கே பயணம் செய்கிறீர்களா என்பதையும் யாரும் தெரிந்து கொள்ளலாம்.
- இதன்முலம், உங்களை பின்தொடர்வதற்கும் (tracking) வாய்ப்பு உள்ளது.
பாதுகாக்க இதை மிஸ் பண்ணாதீங்க:
- லொகேஷனை சமூக வலைத்தளத்தில் பகிராதீர்கள்.
- நம்பகமான ஆட்களுடன் மட்டும் பகிருங்கள்.
- தேவை முடிந்தவுடன் பகிர்வை நிறுத்துங்கள்.
லைவ் லொகேஷன் பகிர்வது நமக்குச் சுலபமாக இருக்கும், ஆனால் அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தினால் மட்டுமே பிரச்னை இல்லாமல் இருக்கும்.