தற்போதைய சூழலில் பலரும் கார் புக் செய்து பயணிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். அவர்களில் சில பயணிகள் டிரைவர்களிடம் முறை தவறி நடப்பதையும் பார்க்க முடிகிறது. அதனை எதிர்கொள்ளும் விதமாக உபர் இந்தியாவில் “இன்அப் விடியோ ரெக்கார்டிங்” அம்சத்தை 10 நகரங்களில் ஆரம்பித்துள்ளது.
இது எப்படி செயல்படும்?
- பயணியை காரில் ஏற்றிய உடனே, டிரைவர் விரும்பினால் செயலியில் வீடியோ ரெக்கார்டிங்கை தொடங்கலாம்.
- மேலும், அவர் ஆன் செய்த உடன் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்படுவதாக பயணிக்கும் அறிவிப்பு வந்துவிடும். நீங்கள் பதிவு செய்யப்படுகிறீர்கள் என தெரியப்படுத்தும்.
- ஆனால், இந்த வீடியோக்கள் டிரைவர் போனில் மட்டுமே இரகசியமாய் சேமிக்கப்படும். உபருக்கு அல்லது பயணி அதை பயன்படுத்த முடியாது. டிரைவர் நினைத்தால் மட்டுமே பகிரலாம்.
- பகிராத வீடியோக்கள் ஒரு வாரத்திற்குள் தானாக அழிக்கப்பட்டு விடும்.
எதுக்கு இந்த வசதி?
பல டிரைவர்கள் “பயணிகள் தவறான புகார் கொடுக்கிறார்கள்”, “ரெவியூவில் அநியாயமான ஸ்டார் கொடுக்கிறார்கள்” என தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர்.
அதற்கு தீர்வாகவே இந்த Video Recording வசதி உதவியாகவே இருக்கும். ஒரு பிரச்சனை ஏற்பட்டால், உண்மை எது? என்று வீடியோ சாட்சியாக இருக்கும்.
பயணிகள் கவனிக்க வேண்டியது.
- இப்போது இந்த அம்சம் சோதனை முயற்சியாக 10 நகரங்களில் மட்டுமே செயலில் இருக்கிறது. முதற்கட்டமாக, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்க்னோ, சண்டிகர், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே உள்ளிட்ட மாநிலங்களில் வந்துள்ளது.
- பயணிகள் பக்கம் இருந்து “பதிவாக இருப்பது என்ன?” என ஆபத்து உணர்வு இருக்கலாம். அல்லது பலருக்கு இந்த ரெக்கார்டிங் பிடிக்காமல் இருக்கலாம். அப்போது அதை மாற்றிக்கொள்ளவும் முடியும்.
உபருக்கு இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். டிரைவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரும். அப்போது இந்த வீடியோ பதிவுகள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் பயணிகளின் பாதுகாப்பும், தனியுரிமை என பல அம்சங்களை உணர்ந்து இருக்க வேண்டியதும் முக்கியம். இந்த அம்சம் விரைவில் மேலும் நகரங்களிலும் விரிவடையலாம்.