Elon Musk-ன் ‘Grokipedia’ உண்மையா? புதிய ஆய்வு சொல்வது அதிர்ச்சி!

Grokipedia-வில் உள்ள பல தகவல்கள் நம்ப முடியாத அதிகாரப்பூர்வமற்ற வலைத்தளங்களில் இருந்து வந்தவை என ஆய்வு கூறுகிறது.

Elon Musk உருவாக்கிய Grokipedia ஒரு அறிவியல் மற்றும் தகவல் திரட்டும் தளம் போல அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது புதிய ஆய்வு ஒன்று, இந்த தளத்தில் உள்ள சில தகவல்கள் நம்ப முடியாது அல்லது சந்தேகமான வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் கூற்றுப்படி, Grokipediaவில் இருக்கும் சில கட்டுரைகள் உண்மையான, நம்பகமான ஆதாரங்களை பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, சில விசித்திரமான வலைத்தளங்கள், சரிபார்க்கப்படாத கதைகள், கூடவே சதி செய்திகளை சொல்லும் வலைத்தளங்களை அடிப்படையாகக் பயன்படுத்தி இருக்கிறது. 

இதனால், Grokipedia-ல் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையானவை என நம்புவது உங்களுக்கு பிரச்னையாகலாம். அதில், பாதுகாப்பானது அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

Grokipedia-யை பயன்படுத்தும் போது, அதிலுள்ள தகவல் சரியானதா என்று மற்ற வலைத்தளங்களிலும் பார்த்து உறுதிப்படுத்தி கொள்வது நல்லது. ஒரே ஒரு தளத்தை மட்டும் நம்புவது தவறாக முடியும் என்று ஆய்வு கூறுகிறது.

 

Leave a Comment