பொதுவாக யாருக்கும் WhatsApp-ல் மெசேஜ் அனுப்ப வேண்டுமானால், முதலில் அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டும். ஆனால், அதைத் தவிர்க்க சிம்பிள் டிரிக் ஒன்றை நீங்க யூஸ் செய்யலாம். நம்பரையும் சேவ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
உங்களது மொபைல் அல்லது லேப்டாப் browser-ல் சென்று https://wa.me/ என்று முகவரியை டைப் செய்து பின் நாட்டுக் குறியீடுடன் மெசேஜ் செய்ய வேண்டிய போன் நம்பரை சேர்த்தால் போதும். உதாரணமாக, இந்திய நம்பர் என வைத்துக்கொண்டு https://wa.me/919876543210 என்று type செய்து enter அடித்தால் நேராக அந்த நம்பரின் WhatsApp chat window open ஆகிவிடும்.
மேலும், நீங்கள் விரும்பினால் முன்கூட்டியே அனுப்ப வேண்டிய மெசேஜையும் அந்த லிங்கில் சேர்க்க முடியும். https://wa.me/919876543210?text=Hi என்று type செய்தால் “Hi” என்ற மெசேஜுடன் chat open ஆகிவிடும்கும். இது மொபைல் WhatsApp-க்கும், WhatsApp Webலும் வேலை செய்யும்.
மேலும் அந்த குறிப்பிட்ட எண்ணை எந்த சேட்டில் அனுப்பிவிட்டு அதை டச் செய்தால் chat with whatsapp எனக் காட்டும். அதிலும் சென்று நேரடியாக அவர்களுடன் பேச முடியும்.
ஒரே ஒருமுறை பேசும் நபர்களுக்கு உங்கள் phone-ல் contact தேவையில்லாமல் நிரம்பாமல் இருக்கும். அந்த நம்பர் WhatsApp-ல் registered ஆகி இருந்தால் மட்டுமே இந்த டிரிக் வேலை செய்யும்.
நம்பர் சேவ் செய்ய வேண்டாமென்றால், இந்த டிரிக்கள் மூலம் உங்கள் நேரத்தையும் உங்கள் contact list-யையும் clean-ஆ வைத்துக்கொள்ள முடியும்.