இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தெரு நாய்கள் நாள்தோறும் தாக்கி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ரேபிஸ் நோயல் இந்த ஆண்டு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ரு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாய்க்கடிக்கு ஆளாகும் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று வருவதில்லை. ஆனால் ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் கடிக்கும் போது ரேபிஸ் தொற்று நேரிடுகிறது என்பது குறிப்பிட்த்தக்கது.