iPhone பயனர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! WhatsApp இப்போது Multi-Account என்ற புதிய வசதியை iOS Beta-வில் test பண்ணிக்கிட்டு இருக்கு. இதனால் ஒரே iPhone-ல இரண்டு WhatsApp accounts பயன்படுத்த முடியும். ஒன்று personal, ஒன்று work இனிமே ஒரே போன்ல யூஸ் பண்றதுல தொல்லையே இல்ல!
இது Android-ல ஏற்கனவே பழக்கப்பட்ட ஒரு விஷயம் தான். ஆனா, iPhoneக்கு இது first time. WhatsApp Beta version பயன்படுத்துற சில பயனர்களுக்கு ஏற்கனவே இது வந்திருக்கு. App-லேயே “Switch Account” என்ற option வரும். அதைக் கிளிக் பண்ணினால், ஒரு account-லிருந்து மற்ற account-க்கு செகண்ட்டுல மாறிடலாம்.
ஒவ்வொரு account-க்கும் தனியா chats, settings, privacy எல்லாமே separate-ஆ வச்சிக்க முடியும். முக்கியம் என்னன்னா, ஒவ்வொரு தடவை log out, log in பண்ண வேண்டிய அவசியமே இனி இல்லை. Just ஒரே ஒரு tap போதும் இன்னொரு அக்கவுண்ட்டுக்கு போய்டலாம். இது பிசினஸ் செய்றவங்களுக்கு இது வர பிரசாதம். Personal வொர்க் life balance பண்ணுறவர்களுக்கு ரொம்ப useful.
இப்போதைக்கு, இது பீட்டா users-க்கு மட்டும் தான். ஆனால் official update வந்துடுச்சுனா, எல்லாருக்குமே iPhone-ல இரண்டு WhatsApp accounts smooth-ஆ use பண்ண முடியுமாம். Gen Zக்கு இது literally life-saving feature தான்!