மகளிர் உலகக் கோப்பை போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஆண்களுக்கான டி20 உலக கோப்பை போட்டி அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாடுகளும் தங்களை தயார் செய்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஐசிசி டி20 உலக கோப்பை நடத்துவதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இம்முறை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தொடங்கி மார்ச் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் தற்போது நடப்பு சாம்பியன் ஆன இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மேட்ச் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இம்முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு போட்டியை காண கூடுதல் ஆர்வத்தை தூண்டும்.
இந்தியா போட்டிக்கான அட்டவணை :
- இந்தியா மற்றும் அமெரிக்கா, இரு நாடுகளும் மோதும் போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி அகமதாபாத் நடைபெறுகிறது.
- இந்தியா மற்றும் நமீபியா மோதும் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
- ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15 இலங்கை கொழும்பு மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
- இந்தியா மற்றும் நெதர்லாந்து மோதும் போட்டி பிப்ரவரி 18 மும்பையில் வைத்து நடைபெறுகிறது.
- இவ்வாறு இந்தியா விளையாடும் அணிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.