விஜயுடன் இணையும் செங்கோட்டையன்.. நாள் குறிச்சாச்சு எப்போ தெரியுமா..?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழி நடத்தி வந்த அதிமுக கட்சி அவரின் மறைவுக்குப் பிறகு சுக்குநூறாக உடைந்த்து. அவரின் மறைவின்போது அதிகாரம் அதிமுகவின் கையில் இருந்ததால் அது பெரிதளவில் வெளியே தெரியவில்லை. ஜெயலலிதா இறந்தவுடன் அவரின் நெருங்கிய நண்பர் சசிகலா கட்சியை கைப்பற்றினார்.

அவரின் கையில் காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியில் இருந்தார். தனது காரியத்தை சாதித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பினார். அதோடு டிடிவி தினகரனையும் கட்சியை விட்டு அகற்றினார்.

கட்சி யாருக்கு என்பதில் மிகப்பெரிய சண்டை போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் அதிகாரம் தன் வசம் இருந்ததால் அந்த பிரச்சனை பெரிதளவில் போகாத அளவுக்கு எடப்பாடி பார்த்துக்கொண்டார். இருப்பினும் 2021 தேர்தலில் தோல்வி அடைந்ததால் கட்சியில் மேலும் பிளவு ஏற்ப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து வெளியேறினார்.

அது மட்டும் இல்லாமல் செந்தில் பாலாஜி போன்ற முன்னணி அமைச்சர்களும் திமுகவில் இணைந்து கொண்டனர். அதிமுக முன்னாள் நிர்வாகி அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பல குடைச்சல்களை கொடுக்க ஆரம்பித்தார். அவர்கள் சொந்தத் தொகுதியில் இருந்து வெளியேற்றுவது தனது ஆதரவாளர்களை நிப்பாட்டுவது என பல இடைஞ்சல்களை செய்து வந்தார்.

இதில் ஆத்திரமடைந்த செங்கோட்டையன் பத்திரிகைகளில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டை வெளியேற்றப்பட்டார். சமீபத்தில் ஏற்கனவே வெளியேறிய சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் தனித்தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசி வந்தார்.

அவர்களும் அதிமுக தேர்தலுக்கு முன்பு ஒன்றிணை வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் இதற்கு கொஞ்சம் கூட எடப்பாடி சம்மதம் தெரிவிக்க இல்லை எனவும் தகவல்கள் வெளியானது. இது சரிப்பட்டு வராது என்று தெரிந்து கொண்ட செங்கோட்டையன் கட்சி மாற முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற 27 ஆம் தேதி இன்று பெரும் இளைஞர் படையை வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை நேரில் சந்தித்து அவரின் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. மேலும் தனது எம்எல்ஏ பதவியும் ராஜினாமா செய்ய உன்னார்.

அதைப்போல ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது சுமூகமாக முடியாமல் சென்றால் தனி கட்சி தொடங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் காலங்கள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் புது புது மாற்றங்களை மக்கள் இனி எதிர்பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment