தமிழக இண்டர்நெட் பயனர்கள் இடையே ஒரு பொதுவான கேள்வி. இந்த website safeஆ இல்லையா? குறிப்பாக புதிய ஆன்லைன் shopping sites, unknown links, random pop-up எல்லாம் வந்துட்டே இருக்கும். இதை avoid பண்ண simple ஆன ஒரு நடைமுறைதான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.
முதலில் பார்த்தே ஆக வேண்டியது websiteன் URL. ஒரு site “https://” என்று தொடங்கினால், அதில் உள்ள “s” தான் security அடையாளம். இதன் அர்த்தம், நீங்கள் அந்த siteல் type பண்ணும் தகவல்கள் encrypt செய்யப்பட்டிருக்கும். அதோடு address barல் lock icon இருந்தால், அது அந்த தளத்துக்கு valid security certificate இருக்கு என்பதின் signal.
இதைத் தொடர்ந்து, siteன் presentation கூட ஒரு முக்கிய அறிகுறி. உண்மையான websitesல் spelling mistakes, weird fonts, random layouts இருக்காது. இப்படி அதிகமாக இருந்தால், அது ஒரு red flag என்று சொல்லலாம்.
ஒரு பாதுகாப்பான தளத்தின் அடிப்படைக் கூறுகளில் “Contact Us”, “About”, “Privacy Policy” போன்ற pages கண்டிப்பாக இருக்கும். இந்த தகவல்கள் இல்லாத தளங்கள் பயனர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தும். அதோடு, அந்த siteன் பெயரை Googleல் search பண்ணினால், மற்றவர்கள் என்ன review சொல்லிருக்காங்க என்பதை secondsல பார்க்கலாம். Scam சைட் பற்றி ஏற்கனவே பலர் எச்சரிக்கை கொடுத்திருப்பார்கள்.
இணைய பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் பயனர்கள் உள்ளே நுழையும் போது இந்தச் சிறிய checks மட்டும் follow பண்ணினாலே, பெரும்பாலான phishing pages மற்றும் fake websitesஐ avoid பண்ண முடியும்.