இந்தியாவுக்கு கிடைத்த கௌரவம்.. காமன்வெல்த் போட்டியை நடத்தும் இந்தியா.. எப்போ தெரியுமா ?

இந்த உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த நாடுகளும் ஒன்றிணைந்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது ஒலிம்பிக் தான். அதற்கு அடுத்த நிலையில் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவாக பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி தான். இப்போட்டியும் ஒலிம்பிக் போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

இதில் 70-க்கும் அதிகமான நாடுகளில் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கு பெறுவார்கள். அப்படி அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. அடுத்த 4 ஆண்டுகள் கழித்து 2030 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற திட்டமிட்டுள்ளது.

காமன்வெல்த் கூட்டமைப்பில் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக ஏற்கனவே இந்தியா விண்ணப்பித்திருந்தது. தற்பொழுது காமன்வெல்த் குழு இந்த விண்ணப்பத்திற்கு செவி சாய்த்து அனுமதி அளித்துள்ளது. அதன்படி குஜராத்தின் அஹமதாபாத்தில் 2030-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Commonwealth Games
Commonwealth Games

இந்தியாவில் ஏற்கனவே 2010 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இருபது ஆண்டுகள் கழித்து 2030 ஆம் ஆண்டு இந்தியா காமன்வெல்த் போட்டிகளை நடத்த உள்ளது. அகமதாபாத்தில் அதற்காக இப்போதிலிருந்து ஏற்பாடுகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment